ஏ.ஆர்.ரஹ்மானை பக்கத்தில் சேர்த்துக் கொள்ளாத மனைவி.. அட இது தான் பிரச்சினையா?
நீளமாக தலைமுடி வைத்திருந்தால் என்னுடைய மனைவி என்னுடைய பக்கத்தில் கூட படுக்கமாட்டார் என ஏ.ஆர்.ரஹ்மான் ஓபனாக பேசியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான்
தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவையே இசையால் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தவர் தான் ஏ.ஆர். ரஹ்மான்.
இவர் தன்னுடைய தனித்திறமையால் ஏகப்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார். இவரின் ரசிகர்கள் இவரை “இசைப்புயல்” என செல்லமாக அழைக்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்து “ ரோஜா” என்ற படத்தில் தான் முதல் முதலாக தன்னுடைய இசை பயணத்தை துவங்கினார்.
இதனை தொடர்ந்து அன்றிலிருந்து இன்று வரை ஏகப்பட்ட திரைப்படங்களுக்கு தன்னுடைய இசையை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ரோஜா திரைப்படம் வெளியான போது ஏ.ஆர்.ரஹ்மான் நீளமான தலைமுடி வைத்திருந்தார்.
ஆனால் பின்னர் நீண்டக்காலமாக தற்போது வைத்திருக்கும் ஹேயர் ஸ்டைல் தான் வைத்திருக்கிறார்.
பொண்டாட்டி கிட்ட படுக்க விட மாட்டார்..
இது குறித்து அவரின் ரசிகர்கள் கேட்ட போது சில உண்மைகளை பகிர்ந்துள்ளார்.
அதில்,“ நீளமாக தலைமுடி வைத்திருந்தால் என்னுடைய மனைவி என்னை பக்கத்தில் படுக்க விட மாட்டார்.
அதனால் தான் என்னுடைய ஹேயர் ஸ்டைல் இப்படி இருக்கிறது. மேலும் என்னுடைய தலைமுடி மேல் அவருக்கு பொறாமை. மனைவியின் பேச்சை கேட்டுக் கொள்ள வேண்டும்.” என கூறியுள்ளார்.
இந்த செய்தியை ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானுக்குள் இப்படியொரு நல்ல குணமா? என ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |