உங்களுக்கு நீளமான முடி வளரணுமா?
தற்போது அனைவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வு.
யாரைப் பார்த்தாலும் அதிகமாக முடி கொட்டுகிறது...இதற்கு என்னதான் தீர்வு என்று தெரியவில்லை என்றே கூறுகின்றனர்.
நாம் என்னதான் முடிக்கு எண்ணெய், தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெம்பூ என்பவற்றை உபயோகித்தாலும் நாம் உண்ணும் உணவுகளும் நம் முடி வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகின்றன.
image - Healthmug
நமது உடல் நாம் உண்ணும் உணவுகளிலிருந்துதான் துத்தநாகத்தைப் பெற்றுக்கொள்கிறது.
சரி இனி என்னென்ன உணவுகள் நம் முடி வளர்ச்சிக்கு ஏற்றது எனப் பார்ப்போம்.
image - Amuthini naturals
பூசணி விதைகள்
பூசணி விதைகளிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது முடி உதிர்தலை தடுத்து, முடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றது.
காளான்கள்
எலும்பு ஆரோக்கியம் மேம்படுவதோடு, முடி பளபளப்பாக ஜொலிக்க உதவி செய்யும். முடி உதிர்தலையும் தடுக்கிறது.
கீரை
கீரைகளில் இரும்பு சத்து அதிகமாக காணப்படுகின்றது. இது முடியின் அமைப்பை மேம்படுத்துகிறது. இதனால் முடி நீளமாக வளர்வதற்கு உதவுகிறது.
பருப்பு வகைகள்
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் துத்தநாகம் அதிகமாக காணப்படுவதால் முடி அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.