ஸ்மார்ட் வாட்சை நிறுத்தும் ஆப்பிள் நிறுவனம்.. காரணம் என்ன?
அமெரிக்காவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மொடல்களின் விற்பனையை நிறுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்
ஆப்பிள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோ இடையே சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் (ஐ.டி.சி.) காப்புரிமை தொடர்பான வழக்கில் ஆப்பிள் நிறுத்தத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க சந்தையில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என இரண்டு மொடல்களை ஆன்லைன் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாங்கமுடியாது என்று கூறியுள்ளது.
ஆனால் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் இந்த 2 மொடல்களின் விற்பனை எப்பொழுதும் போன்று நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
ஐடிசி கூட்டமைப்பில் நடைபெற்ற காப்புரிமை வழக்கு என்னவெனில், பிலட் ஆக்சிஜன் சென்சிங் அம்சம் தொடர்பாக மசிமோ நிறுவனம் பதிவு செய்திருந்த காப்புரிமைகளை ஆப்பிள் மீறியது கண்டறியப்பட்டது.
இதனால் மேலே கூறப்பட்ட இரண்டு ஆப்பிள் வாட்ச் மொடல்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதற்கு சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை விதித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆனால் மசிமோ காப்புரிமை குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் விற்பனையை தொடங்குவதற்கு முயற்சித்து வருகின்றது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிசம்பர் 25-ம் தேதிக்குள் இறுதி முடிவை எடுக்க இருக்கின்றார் என்றும் டிசம்பர் 26ம் தேதி ஐடிசி தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் மற்றும் மசிமோ இடையே காப்புரிமை சார்ந்த பிரச்சினை கடந்த 2020 ஆண்டு முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |