கண் பரிசோதனை செய்தால் போதும்... சிறுநீரக கோளாறை ஈஸியாக கண்டுபிடிக்கலாம்
கண் பரிசோதனை செய்வதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பை முன்கூட்டியே அறிய முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிறுநீரக பிரச்சினை
மனிதர்களின் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை சுத்திகரிக்கும் திறனைக் கொண்டுள்ள சிறுநீரகம் என்பது ஒருவர் உயிர் வாழ மிகவும் முக்கியமான உறுப்பாகும்.
ஆனால் சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள் எதுவும் ஆரம்பத்தில் எந்தவொரு அறிகுறி இல்லாமல் இருக்கும் நிலையில், இவற்றினை முன்கூட்டியே கண்டறிவதற்கு தற்போது ஒரு வழி கிடைத்துள்ளது.
தற்போதைய பரிசோதனைகளில் சிறுநீரகம் பாதிக்காமல் முன்கூட்டியே எதையும் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் நமது கண் பரிசோதனை மூலம் அவற்றினை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.
கண்பரிசோதனையில் எவ்வாறு கண்டறிவது?
நமது கண்களுக்கு பின்னால் உள்ள ரெடினா என்னும் விழித்திரை வெளிச்சத்தை உணர்ந்து மூளைக்கு சிக்னல்களை அனுப்புகின்றது. இந்த விழித்திரையை மிகப்பெரிய அளவில் படம்பிடித்து பார்த்தால், அதில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் சிறுநீரக பாதிப்பை துரிதமாக கண்டறிய முடியுமாம்.
நமது உடலில் நுண்ணிய ரத்த நாளங்களை கொண்டுள்ள உறுப்பு என்றால் கண் மட்டுமே... இந்த நாளங்களில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதை கண்டறிந்தால் எளிதில் சிறுநீரக பாதிப்பினை தெரிந்து கொள்ளலாம்.
3 டி முறையில் ஒளி அலைகளைப் பயன்படுத்தி கண் விழித்திரையின் குறுக்கு வெட்டு படங்களை பிடிக்கும் ஓசிடி என்ற பரிசோதனை மூலம் சில நிமிடங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |