மழைக்கால சளி இருமலை அடித்து விரட்டும் ரசம் - இந்த பழம் சேர்த்து செய்ங்க
மழைக்காலத்தில் பல தொற்று நோய்கள் வரும். அதிலும் இந்த சளி இருமல் வந்து விட்டால் நமக்கு மிகவும் அசளகரியமாக இருக்கும்.
இந்த சளி இருமலுக்கு மருந்துகளை விட நல்ல உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதற்கு தான் ஒரு பெஸ்ட்டான ரசத்தின் ரெசிபியை இந்த பதிவில் பார்க்கப்போகின்றறோம்.
இது செய்வதற்கும் எளிது சுவையும் மிகவும் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையானவை
- அன்னாசிப்பழம் - 1 கப்
- சீரகம்
- மிளகு
- 2 பச்சை மிளகாய்
- நெய்
- நெல்லிக்காய் அளவு புளி
- எலுமிச்சம்பழ சாறு
- கொத்தமல்லி
- உப்பு

செய்யும் முறை
முதலில் அன்னாசிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக கட் செய்து ஒரு கப் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
பின்னர் மிளகு, சீரகத்தை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் தனியாக அரைத்து எடுக்கவும் . இப்போது கரைத்த புளி கரைசலில் அரைத்த மிளகு சீரகத்தை சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் ஒரு பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும். இதில் உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பின்னர் ஒரு கொதி வந்ததும் அதில் அரைத்த அன்னாசிப் பழ கலவையை சேர்க்கவும்.

பின்னர் அதை நன்றாக கலக்கி விடவும். பின்னர் இதில் கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்து கிளறி இறக்கவும். இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து பரிமாறவும்.
இந்த ரசத்தை வெள்ளை சாதத்துடன் குழந்தைகளுக்கு பிசைந்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த மழை நேரத்தில் இதுப்போன்ற ஆரோக்கியமான ரசம் குழந்தைகளை சளி, தும்மல், இருமலில் இருந்து நிவாரணம் பெற உதவும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |