போதை பொருளாக மாறும் கசகசா- அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?
இந்தியர்களின் பாரம்பரிய உணவில் கசகசாவுக்கு என தனியிடம் உள்ளது.
ஏகப்பட்ட மருத்துவ குணங்களை தன்வசம் வைத்திருக்கும் மூலிகை பொருளாக கசகசா பார்க்கப்படுகிறது.
அதில் நீல பாப்பி விதைகள், வெள்ளை பாப்பி விதைகள், ஓரியண்டல் பாப்பி விதைகள் என மூன்று வகைகள் உள்ளன. இவற்றில் வெள்ளை கசகசா அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை அதிக அளவு கொண்டுள்ளதால் உடலுக்கும் நல்லது.
இனிப்பு பொருட்களின் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் கசகசாவை பாப்பி மலரின் செடி விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த விதைகளை எடுத்து நன்றாக காய வைத்திருந்து கசகசா தயாரிக்கிறார்கள்.
பல மருத்துவ பலன்களை தரக்கூடிய கசகசாவை நம்மிள் சிலர் போதை பொருளாகவே பார்க்கிறார்கள். அதற்கான காரணத்தை எமது பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

கசகசா விதையில் உள்ள சத்துக்கள்
வழக்கமாக உணவில் பயன்படுத்தும் கசகசா விதைகளை பேக்கிங் செய்யப்படும் உணவில் அதிகமாக பார்க்கலாம். இதில் உள்ள கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றை தவிர்த்து கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், சர்க்கரை, சோடியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

கசகசாவிதையின் பலன்கள்
1. கசகசா விதையில் உள்ள நார்ச்சத்து செரிமான கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணமாக பார்க்கப்படுகிறது. இது குடல் இயக்கங்களை சீராக்கும்.
2. இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கசகசாவிற்கு உள்ளது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
3. கசகசாவில் உள்ள லினோலிக் கொழுப்பு அமிலம், கொழுப்பு அளவை குறைத்து, தடிப்புத்தோல் அழற்சியையும் தடுக்கிறது. கொழுப்பின் மூலங்களை மாற்றி கரோனரி இதய நோய்க்கான ஆபத்தையும் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

4. எலும்புகளுக்கு வலிமை கொடுக்கும் ஆற்றல் கசகசாவிற்கு உள்ளது. ஏனெனின் மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் ஆஸ்டியோபொராசிஸ் தடுக்கிறது.
5. கசகசாவில் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான லினோலிக் அமிலம் ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. இது காயங்கள் ஏற்பட்டிருந்தால் விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது.
இவ்வளவு பலன்களை தன்வசம் வைத்திருக்கும் கசகசாவை அதிகமாக சாப்பிடும் பொழுது ஓபியாய்டு விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தில் கூறப்பட்டது போன்று கசகசா விதைகளில் உள்ள மார்பின், கோடின் மற்றும் தீபைன் போன்ற ஓபியம் ஆல்கலாய்டுகள் உள்ளன.

அதே போன்று காய்களை வெட்டும் பொழுது பால் வெள்ளை திரவத்தை வெளியிடும். உணவுப்பொருள்களில் பயன்படுத்தும் பொழுது கழுவப்பட்ட விதைகளை விட கழுவப்படாத விதைகளின் மேற்பரப்பில் இந்த ஆல்கலாய்டுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
இது சில சமயங்களில் போதை உணர்வை தரலாம். உணவோடு சேர்த்து எடுத்துகொள்ளும் போது இவை பாதுகாப்பானது.
ஆனால் தனியாக இதை தேநீர் வடிவிலோ, நீரில் ஊறவைத்தோ குடிக்கும் போது சமயங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும். அப்படி இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. அத்துடன் ஆண்களுக்கு வீரியமிக்க பலம் தருவதும் உண்மை என்றும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |