இந்த நிலைமைக்கு காரணம் என் அப்பா தான்! வைரலாகும் அனிதா விஜயகுமாரின் புதிய பதிவு
நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதா வெளிநாட்டில் டாக்டராக பணியாற்றி வந்த நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற இவர் தற்போது தனது குடும்பம் தொடர்பில் சமூக வவைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜயகுமார்
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் ஒரு மாபெரும் நடிகர் தான் விஜயகுமார்.
இவரின் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே நடிப்புத் துறையில் பயணித்திருந்தாலும் அனிதா விஜயகுமார் மாத்திரம் தனக்கென வேறு பாதையை தெரிவுசெய்துக் கொண்டார்.
நடிகர் விஜயகுமாரின் மனைவிகள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார்.
மருத்துவரான அனிதா விஜயகுமார், கோகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவரது மகள் தியா என்பவருக்கு தான் அண்மையில் திருமணம் நடைப்பெற்றது.
அதன் பின்னர் தான் அனிதா விஜயகுமார் மருத்துவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதுபோல சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா விஜயகுமார் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
ஆனால் இப்போது தன்னுடைய தந்தை மற்றும் குடும்பத்தினர் குறித்து காணொளியொன்றில் பேசி இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |