Angeline Sheril: 3000 மேடைகள் ,25 உலக சாதனைகள்... என் அப்பாவே கூத்தாட போறியா கேட்டாரு!
கடலூர் மாவட்டம் சாவடி பகுதியை சேர்ந்தவர் ஏஞ்சலின் ஷெரில், பிறப்பிலேயே அட்ரீனல் ஹைப்பர் பிளேசியா என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்ட்டுள்ள போதும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியாவிற்காக விளையாடி சிலம்பத்தில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ள ஒரே பெண் ஏஞ்சலின் ஷெரில்தான்.
கரகத்தைத் தலையில் சுமந்தவாறே ஆடி, கீழே வைக்கப்பட்ட ஊசியைக் கண்களால் எடுப்பது, பிளேடைக் கண் இமையால் எடுப்பது, ஆணிப்பலகை மீது ஏறி நின்று கரகம் ஆடுவது, கண்ணாடித் துண்டுகள் மீது ஆடுவது, கண்ணாடித் துண்டுகள் மீது யோகம் செய்வது, இரண்டு கைகளாலும் சிலம்பம் சுழற்றுவது என்று பல சாதனைகளைச் செய்திருக்கிறார்.
பரதம், சிலம்பம், கரகம், கட்டைக்கால் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட தமிழர் கலைகளைக் கற்று 25 உலக சாதனைகளை படைத்துள்ளார். இவரின் வாழ்க்கை பற்றி பல்வேறு வியப்பூட்டும் பின்னணி குறித்து முழுமையாக இந்த நேர்காணலின் வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |