நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுசுக்கும், தமிழகத்தை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது தனுஷ் - அக்ஷயா தம்பதி மாலை மாற்றி கேக் வெட்டிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நெப்போலியன் வீட்டு விசேஷம் பற்றி மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் நெப்போலியன்
அரசியல் சினிமா என மிகவும் பிரபலமாக வலம் வந்தவர் தான் நடிகர் நெப்போலியன் .அவருடைய மூத்த மகன் தனுஷிற்கு ஏற்பட்ட சதை சிதைவு நோயால் அனைத்தையும் விட்டு விலகி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
கடந்தவருடம், இவருடைய மூத்த மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் மிகவும் பிரமாண்டமாக நடை பெற்றது.

அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் தனது மகன் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பல் மூலமாக ஜப்பான் சென்று தனுஷின் திருமணத்தை கோலாகலமாக நடத்தினார்.
அவர்களின் திருமணத்தில் நடிகர் சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பூ, கார்த்தி, பாண்டியராஜன் போன்றோர் சினிமா துறையில் இருந்து பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தந்தையாக நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததை சுட்டிக்காட்டி ஒருதரப்பினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்த நிலையில், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமண வாழ்க்கை வாழ முடியாது என்று சிலர் சமூக ஊடகங்களில் விமர்ச்சிக்கவும் செய்தனர்.
இருப்பினும் தான் தனுஷ் - அக்ஷயா தம்பதியினர் தங்களின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்களிள் தலை தீபாவளியை கொண்டாட்டடும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், நெப்போலியன் மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதியின் முதலாம் ஆண்டு திருமண நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டம் அமெரிக்காவில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. குறித்த காணொளியை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உருக்கமான பதிவொன்றையும் போட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |