கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இரத்தசோகை...
ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கும் வேளையில் அவள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
கர்ப்பம் தரித்திருக்கும் வேளையில் பல நோய்கள் பெண்களைத் தாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. அதில் குறிப்பாக இரத்த சோகையை கூறலாம்.
image - News18
குருதியில் விட்டமின் பி, இரும்புச் சத்து என்பன குறைவாக இருக்கும்பட்சத்திலோ அல்லது குருதியிலுள்ள சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ அல்லது குருதியில் ஹீமோகுளோபின் குறைந்தாலோ இரத்த சோகை ஏற்படுகின்றது.
கர்ப்ப நேரத்தில் சரியான உணவுமுறை, மருத்துவரீதியான பின்பற்றுதல்கள் போன்றன குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கு வழி செய்கிறது.
image - istockphoto.com
கர்ப்பகாலத்தில் எந்தவித சத்துக் குறைபாடுகளும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச் சத்து. ஆனால், இந்தச் சத்து குறைபாடு தற்போது கர்ப்பிணிகளிடையே அதிகரித்துள்ளது.
சாதாரண நாட்களை விட கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரண்டு மடங்காக இரும்புச் சத்து தேவைப்படுகிறது. ஏனென்றால் கர்ப்ப காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்க அதிகப்படியான உடல் உறுப்புக்கள் வேலை செய்கின்றன. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் இரும்புச் சத்தின் தேவை சரியாக பூர்த்தி செய்யப்படாதவிடத்து இரத்த சோகைக்கு உள்ளாக நேரிடுகிறது.
image - BabyCenter UK
இந்த காரணத்தினால் உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தி தடுக்கப்படுகின்றது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியாமல் போய்விடுகின்றது.
அதுமாத்திரமின்றி ஃபோலிக் ஆசிட், விட்டமின் பி போன்ற சத்து குறையும்போது இரத்தசோகையானது மேலும் அதிகரிக்கிறது. இந்த பிரச்சினையானது, குழந்தையின் உயிரையோ அல்லது தாயின் உயிரையோ பாதிக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது என்பது அதிர்ச்சியான ஒரு செய்தி.
அதுமட்டுமில்லாமல் பிரசவத்தின்போது ஏற்படும் இரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. இதற்கு இரத்த சோகை காரணமாக இருக்கின்றது.
image - Everyday Health
பரம்பரை வாயிலாக தாய் குள்ளமாக இருப்பதாலும் இரத்த சோகை ஏற்படுவதாலும் தாய் பிரசவத்தின்போது இறக்கும் அபாயம் அதிகரிக்கிறது.
மேலும் இரத்த சோகை பாதிப்பின் காரணமாக தாயின் கரு பலவீனமாக இருப்பதால் குழந்தையானது குறை பிரசவம் அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையாக பிறப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
image - Health Digest
குருதியில் உள்ள ஹீமோகுளோபினானது, ஒரு யூனிட் அளவால் அதிகரித்தாலும் குழந்தை இறக்கும் அபாயமானது 24 சதவிகிதமாக குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த இரத்த சோகையினால் பாதிப்புற்ற தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தையானது, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தையாக பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.