போன மாதம் கர்ப்பம்... இந்த மாதம் ரகசிய திருமணமா? பாவனியால் குழப்பத்தில் ரசிகர்கள்
பிக்பாஸ் பாவனியின் ரகசிய திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவருக்கு அவர் அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சியளித்து வருகின்றது.
நடிகை பாவனி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் தான் நடிகை பாவனி ரெட்டி. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, சக போட்டியாளரான அமீர் பாவனியைக் காதலித்து வந்துள்ள நிலையில், பாவனி இதற்கு எந்தவொரு பதிலும் கூறாமல் தனது வேலையை பார்த்து வந்தார்.
ஏனெனில் பாவனி ஏற்கனவே ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக திடீரென கணவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்து வந்தார்.
பிக்பாஸ் முடிந்த பின்பு அமீர், பாவனி இருவரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நடனத்தில் கலக்கினர். பின்பு அமீரின் காதலை பாவனி ஏற்ற நிலையில், இருவரும் அஜித் நடித்த துணிவு படத்தில் நடித்திருந்தனர்.
ரகசிய திருமணம் உண்மையா?
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார் பாவனி.
அப்போது ரசிகர் ஒருவர், உங்களுக்கும் அமீருக்கும் திருமணம் ஆனதை நீங்க ஏன் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பாவனி, “ம்ம்ம்... நீங்க முடிவே பண்ணிட்டீங்களா.... கடந்த மாதம் கர்ப்பமாக இருக்கேன் என்று சொன்னீங்க. அதையடுத்து நாங்கள் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக கூறினீர்கள்.
தற்போது நாங்கள் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக சொல்கிறீர்கள். அடுத்து என்னது” என சிரிக்கும் எமோஜியுடன் பதிலளித்து, மற்றொரு புறம் ரகசிய திருமணம் செய்யவில்லை என்பதையும் இதன் மூலம் உறுதி படுத்தியுள்ளார்.