உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை வேக வேகமாக கரைக்கும் அற்புத பானம்...ஒரே இரவில் அதிசயம் நடக்கும்!
நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறைக்க உணவு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக எடை இழப்பு பயணத்தில் நிச்சயம் ஒரு இயற்கை பானம் அவசியம்.
எந்த பானத்தை தெரிவு செய்வது என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு இந்த அற்புத பானம் உதவும். உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை வேக வேகமாக கரைக்க உதவும் சக்தி இதற்கு உண்டு.
ஒரே இரவில் பல மாற்றங்களை உணரலாம்.
ஆரஞ்சு ஜூஸ்
பழங்களில் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் அதிகமாக இல்லை. எனவே நீங்கள் உங்களின் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், நற்பதமான ஆரஞ்சு பழத்தைக் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் குடித்து வாருங்கள்.
அன்னாசி ஜூஸ்
தொப்பையைக் குறைக்க மிகச்சிறந்த வழி அன்னாசி ஜூஸைக் குடிப்பதாகும். ஏனெனில் அன்னாசியில் உள்ள புரோமெலைன் என்னும் நொதி, புரோட்டீனை வளர்சிதை மாற்றம் செய்வதற்கும், அதிகப்படியான வயிற்றுக் கொழுப்பைக் கரைப்பதற்கும் உதவுகிறது. மேலும் புரோமெலைன் கொழுப்புக்களை ஜீரணிக்க மற்றும் பசியைக் கட்டுப்படுத்த லிபேஸ் போன்ற பிற நொதிகளுடன் ஒத்துழைக்கிறது.
மாதுளை ஜூஸ்
மாதுளை ஜூஸ் எடை இழப்பு முதல் குறையில்லா சருமம் மற்றும் முடியைப் பெறுவது வரை, உடலில் பல மாயங்களை ஏற்படுத்தும். இந்த பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலிஃபீனால்கள் மற்றும் லினோலெனிக் அமிலம் போன்றவை எடை இழப்பிற்கும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆகவே அடிக்கடி மாதுளை ஜூஸை குடித்து, உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்க முயலுங்கள்.