ராதிகாவுடன் ஹனிமூன் வந்த கோபிக்கு ஏற்பட்ட துயரம்! பரிதாபநிலையில் சிக்கித் தவிக்கும் காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வரும் நிலையில், அனைவருக்கும் உண்மை தெரிந்து கோபி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் தனது வீட்டை எதிர்த்து ராதிகாவை திருமணமும் செய்துள்ளார். பாக்கியா தனக்கு கிடைத்த ஆர்டரில் நன்றாக சமைத்து கொடுத்து அடுத்தடுத்து ஆர்டர் பெற்று வருகின்றார்.
ஹனிமூனில் சிக்கித் தவிக்கும் கோபி
ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ள கோபி ஹனிமூன் வந்த இடத்தில் அங்கு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மற்றும் பாக்கியா குடும்பமும் வந்துள்ளது.
இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் கோபியை அவதானித்து அவரது அறைக்கு சென்று அட்டகாசம் செய்துள்ளார். ஆனால் கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரியாமல், பாக்கியா அக்காவிற்கு துரோகம் செய்கிறீர்களா என்று கேட்டு வீட்டில் உண்மையைக் கூற உள்ளதாக ஆவேசமாக செல்கின்றார்.
இறுதியில் ஹனிமூன் வந்த இடத்தில் கூட நிம்மதி இல்லாமல் தவிக்கும் கோபி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றார்.