பிக்பாஸ் பிரபலத்தின் புதிய பாடல்! இணையவாசிகளை கட்டிப்போடும் வீடியோ பதிவு..
கடந்த காலங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான ஆஜித் தற்போது புதிய பாடலொன்றை பாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஆஜித் - கேப்ரில்லா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் முக்கிய போட்டியாளராக திகழ்ந்தவர் தான் ஆஜித் காலிக்.
இதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் பிரபலமான கேப்ரில்லாவுடன் இணைந்து பல ரீல்ஸ்களை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்தார்.
இந்நிலையில் கேப்ரில்லாவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன, ஆனால் இவர்கள் அண்ணன், தங்கை என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த நிலையில், இவர்களைப் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது.
புதிய பாடல்
இதனையடுத்து சமீபத்தில் புதிய பாடலொன்றை பாடி, இசையமைத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ஆஜித் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.