அமெரிக்காவில் பயங்கர தீ விபத்து: 18,000 பசுக்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி வீடியோ
அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18,000 பசுக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பயங்கர தீ விபத்து
டெக்சாஸ் மாகாணத்தில் முக்கியமான மாட்டு தொழுவம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட இந்த தீ விபத்தில் சிக்கி, 18000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற தீ விபத்துக்களில் 65 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
अमेरिका के टेक्सास में डेयरी फार्म में भीषण विस्फोट, 18,000 गायों की हुई दर्दनाक मौत
— News24 (@news24tvchannel) April 14, 2023
Texas, | #Texas | #America | Cow | #Cow pic.twitter.com/UMcgG0t1f6