கம கம வாசனையில் ஆளை தூக்கும் ஆம்பூர் பிரியாணி! எப்படி செய்வது
பொதுவாகவே உலகளாவிய ரீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவுகளில் பிரியாணி முக்கிய இடம் வகிக்கினறது.
அந்த வகையில் தமிழகத்தில் மிகவும் பிரபல்யமான ஆம்பூர் பிரியாணியை வீட்டிலேயே எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி - 1கப் அளவு
சிக்கன் - 1/2 கிலோ கிராம்
தயிர் - 2 தே.கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பெரிய தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு விழுது - 1 தே.கரண்டி
இஞ்சி விழுது -1 தே.கரண்டி
எண்ணெய் - 3 தே.கரண்டி
நெய் - 1 தே.கரண்டி
எலுமிச்சை பழம் - பாதி
அளவு பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவிய பிறகு அரை மணி நேரம் நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கனை சுத்தம் செய்து தேவையான அளவில் துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் காய்ந்த மிளகாயை சூடான நீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை நன்றா ஊற வைக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் ஊறவைத்த மிளகாயை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மென்மையான பேஸ்ட் பதத்தில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து சூடானவுடன் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனுடன் பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.
நன்றாக வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுது மற்றும் நீளவாக்கில் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் அதில் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதில் அரைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து கலந்து வதக்கவும். இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அலசி வைத்துள்ள கோழி துண்டுகள், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அதையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கர் மூடியை மூடி விசில் போடாமல் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
அதற்கிடையில் பாத்திரம் ஒன்றை மற்றொரு அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்ததும் ஊற வைத்த சீரக சம்பா அரிசியை அதில் சேர்க்க வேண்டும்.
பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வரை கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். அதன் பின்னர் அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.
அரிசி முழுவதுமாக வெந்து இருக்கக் கூடாது. பத்து நிமிடங்கள் கழித்து குக்கரில் அரிசியை போட்டு மூடி விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.
10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து குக்கரிலிருந்து பிரஷர் தானாக அடங்கும் வரை ஆறவிட்டு எடுத்தால் மணமணக்கும் பிரியாணி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |