கணவரின் சடலத்தை சமையலறையில் புதைத்து மனைவி செய்த காரியம்... அம்பலமாகிய நாடகம்
இரண்டாவது காதலுக்கு கணவர் தடையாக இருந்ததால், காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் ரெய்ஸ் ஷேக் என்பவர் தன்னுடைய மனைவி ஷாஹிதா ஷேக்குடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அதே பகுதியில் உள்ள அமித் விஸ்வகர்மா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்துள்ள நிலையில், பழக்கத்தினை விடுமாறு கூறியுள்ளார். கணவர் கண்டித்ததை காதலனிடம் கூற, காதலனோ கோபமடைந்து கணவரை தீர்த்துகட்டிவிட்டால் பிரச்சினை இல்லை யோசனை கூறியுள்ளார்.
இதற்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்த மனைவி, கடந்த 11 தினங்களுக்கு முன்பு கணவர் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் காதலனை வரவழைத்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்பு கணவரின் பிணத்தினை சமையலறையில் புதைத்ததோடு, புதிய டைல்ஸ் போட்டும் மூடியுள்ளார். சில நாட்கள் கழித்து கணவரை காணவில்லை என்று பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், பெண்ணின் வீட்டிற்கு வந்து ஆராய்ந்த போது, சமையலறையில் மட்டும் புதிய டைல்ஸ் போட்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்து தோண்டி பார்த்துள்ளனர்.
அப்பொழுது பெண்ணின் கணவரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்ட பொலிசார், பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.
பின்பு குறித்த பெண்ணை கைது செய்த பொலிசார், அவருக்கு உதவி செய்த காதலனை வலைவீசி தேடி வருகின்றனர்.