படப்பிடிப்பில் அமலாபால் படுத்திய கொடுமை! உண்மையை உடைத்த பிரபல கலைஞர்
நடிகை அமலாபால் படப்பிடிப்பில் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டுள்ள சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அமலாபால்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அமலா பால், மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமானார்.
மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
முன்னணி நடிகையாக வலம்வந்த இவர் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்ததுடன், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியவும் செய்தார்.
பின்பு சிங்கிளாக இருந்து வந்த அமலாபால் சில ஆண்டுகளுக்கு பின்பு தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்ததுடன், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் தற்போது பிறந்துள்ளது.
படப்பிடிப்பில் நடந்த கொடுமை
வட இந்தியாவின் பிரபல மேக்கப் கலைஞரும், சிகையலங்கார நிபுணரான ஹேமா, அமலாபால் படுத்த கொடுமையைக் குறித்த்து பேசியுள்ளார்.
ஏப்ரல், மே மாதத்தில் அமலா பாலுடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று குறித்த கலைஞருக்கு, அங்கு ஒதுங்கி நிற்பதற்கு கூட மரம் இல்லையாம்.
நீண்ட நேரம் வெயிலில் அவதிப்பட்ட இவரும், இவருடன் சேர்ந்த சில பெண்களும் ஒரு கேரவனுக்குள் சென்று அமர்ந்தார்களாம். உடனே மேனேஜரை அனுப்பி அமலாபால் இவர்களை வெளியேற்றியுள்ளாராம்.
வேறு வழியில்லாமல் குறித்த கேரவனிலிருந்து இறங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்னும் அதிகமான சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மற்ற எந்தவொரு பிரபலங்களும் இவ்வாறு பார்த்ததில்லை... நடிகை தபு கூட இவர்களை வேன் புக் செய்து நன்றாக பார்த்துக் கொள்வாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |