குடும்பத்துடன் ஆல்யா மானசா என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... குவியும் லைக்குகள்
சீரியல் நடிகை ஆல்யா மானசா தனது காதல் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா சென்று தற்போது வெளியிட்டுள்ள அழகிய காணொளிக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.
ஆல்யா மானசா- சஞ்சீவ்
ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இவர்கள் இந்த சீரியலை தொடர்ந்து காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள்.

திருமணத்தின் பின்னரும் தங்களது தொழிலில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருகின்றார்கள். சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடி தான் உச்சத்தில் இருக்கின்றனர்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

இனியா' தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்துக் வருந்தார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிநடை போட்டு வரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

அதுமட்டுமன்றி பாரிஜாதம் என்ற தொடரிலும் நடித்து வருகின்றார்.இந்நிலையில், ஆல்யா குடும்பத்துடன் சுற்றுலா சென்று தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |