கடற்கரை மணலில் குழந்தைகளுடன் குதூகலிக்கும் பிரபலம்! ஆல்யாவின் மகனை பார்த்ததுண்டா?
கடற்கரையில் குழந்தைகளுடன் மண்ணில் விளையாடிய ஆல்யா மானசாவின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை பயணம்
சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலில் பிரபல்யமானவர் தான் நடிகை ஆல்யா மானசா. இவரின் நடிப்பிற்கு இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் இணைந்து நடிக்கும் சஞ்சிவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணத்திற்கு முன்னர் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது எல்லாம் இவர்களின் காதலை வெளிப்படையாக மேடையில் கூறி வந்தார்கள்.
இவர்களின் திருமணத்திற்கு பின்னரும் சீரியல்களில் கமிட்டாகி தான் இருந்து வந்தார்கள்.
இந்த நிலையில் ஆல்யா மானசாவிற்கு தற்போது ஐலா மற்றும் ஆர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
கடற்கரையில் மணலுடன் மணலாக மாறிய பிரபலங்கள்
இவர்கள் பிறந்த தினத்திலிருந்து அவர்கள் வளரும் ஒவ்வொரு செயற்பாடுகளையும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் பகிர்ந்து வருகிறார்கள்.
இதன்படி, சமிபத்தில் இவர்களின் குழந்தைகளின் பெயரை வைத்து புதிய யூடியூப் சேனலொன்றை துவங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஆல்யாவின் இரண்டாவது குழந்தைக்கு பிறந்த நாள் என்பதால் கடற்கரையில் மணலில் இருக்கும் வீடியோக்காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இவர்கள் இருவரும் கடற்கரை மணலில் மிகவும் சந்தோசமாக விளையாடி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.