மகனை இழந்த பாரதி ராஜாவுக்கு ஆறுதல் கூறும் கங்கை அமரன் ... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி
இயக்குனரும் நடிகருமான பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த 25 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக காலமானார்.
இவரின் இழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனோஜ் உடலுக்கு கார்த்தி,விஜய், சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட திரையுல பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது தன் மகனின் இழப்பை தாங்க முடியாமல் பாரதிராஜா கதறி அழுதது காட்சி இணையதத்தில் வைரலாகி பலரையும் மனமுருக செய்தது.
பாரதி ராஜாவின் ஒரே மகனை 48 வயதில் இழந்த 87 வயதான பாரதிராஜாவையும், அவருடைய குடும்பத்தினரையும் எளிதில் மீள முடியாத துயரில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அவரை திரையுலகினர் பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும், இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் பாரதிராஜாவை அவரது வீட்டில் சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
அப்போது, பாரதிராஜா நடிப்பில் 1980ஆம் ஆண்டு வெளியான கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து, தான் எழுதிய ’சிறு பொன்மணி அசையும்’ பாடலை பாடிக்காட்டி அவர் பேசிய விடயங்கள் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
