ஆல்யாவை விட ஆக்டிங்கில் கலக்கும் ஐலா பாப்பா! எவ்வளவு பெரிய ஆளா வளர்ந்துட்டாங்க பாருங்க
சின்னத்திரையில் பிரபலமாக நடித்து வரும் கதாநாயகியான ஆல்யா மானசா அவருடைய மகளுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகளை பார்க்கும் போது ரசிகர்களுக்கு வியப்பாக இருக்கிறது.
சின்னத்திரையில் செய்த சாதனைகள்
பிரபல தொலைக்காட்சியில் டாப் ரேட்டிங்கில் ஓடிக் கொண்டிருந்த “ராஜா ராணி” என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்களுக்கு பழக்கமானவர் தான் நடிகை ஆல்யா மானசா.
இவரின் நடிப்பை ஒரே சீரியலில் காட்டி அத்தனை இல்லத்தரிசிகளையும் கட்டுக்குள் இழுத்து விட்டார். அந்தளவு வசிக்கரிக்கும் பார்வை கொண்டவர் ஆல்யா.
இவர் ஒரு நடிகை மட்டுமல்ல இவர் ஒரு டான்ஸாராகவும் இருக்கிறார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான டான்ஸ் நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
அத்துடன் தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி ரீல்ஸாக போடுவார். இதனை தொடர்ந்து ஆல்யா தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஐலா பாப்பாவுடன் ரீல்ஸ் செய்யும் ஆல்யா
இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் கார்திக் இருவரும் இணைந்து சொந்தமாக யூடியூப் சேனலொன்றை நடத்தி வருகிறார்கள்.
இந்த யூடியூப் சேனலில் அவர் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குழந்தைகளுடன் இருக்கும் நேரங்கள் என அனைத்து விடயங்களையும் வீடியோவாக எடுத்து பகிர்வார்கள்.
இதனை தொடர்ந்து அவரின் இரண்டு குழந்தைகளுக்கும் என தனியாக ஒரு யூடியூப் சேனலொன்றை துவங்க இருப்பதாக கடந்த காலங்களில் அறிவித்திருந்தார்கள்.
அந்த வகையில் ஐலா பாப்பாவுடன் ரீல்ஸ் செய்யும் வீடியோக்காட்சியை ஆல்யா மானசா அவர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்க்கும் ஆல்யா ரசிகர்கள், “ அம்மா விட ஆக்டிங்கில் தெறிக்க விடுகிறார் ஐலா பாப்பா என கமண்ட் செய்து வருகிறார்கள்.