இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னும் மணக்கோலத்தில் ஜொலிக்கும் ஆல்யா மானசா!
சீரியல் நடிகையான ஆல்யா மானசா மணக்கோலத்தில் இருப்பது போல அழகாக அலங்கரித்துக் கொண்ட வீடியோ ஒன்று அதிகம் வைரலாகி வருகின்றது.
ஆல்யா மானசா
சீரியலில் பிரபல நடிகைக்கு இணையாக பார்க்கப்படுவர் தான் ஆல்யா மானசா. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமானார்.
அதற்குப் பிறகு பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார். அதில் தனது இயல்பான நடிப்பால் அதிகம் பிரபல்யமானார்.
இவர் அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர்களுக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் இருக்கின்றனர்.
மணக்கோலத்தில் ஆல்யா
ஆல்யா மானசா தற்போது வேறு ஒரு சேனலில் புது சீரியலில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவ்வாக இருக்கும் ஆல்யா மானசா பல ரீல்ஸ்களையும் புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் திருமணத்திற்கு தயாராகுவது போல தன்னை அலங்கரித்துக் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றும் இன்னும் அப்படியே 16 வயது பெண் போலவே இருக்கிறார் என கமெண்டு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |