எனக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்து விட்டது! ஆல்யா கொடுத்த அதிர்ச்சி
"எனக்கு சீரியலில் திருமணம் முடிந்து விட்டது" என ஆல்யா மானசா சஞ்சீவ் கார்த்திக்கை கடுப்பேத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியலில் எப்படி பிரபலமானார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ராஜா ராணி” என்ற சீரியலில் செண்பாவாக மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் தான் நடிகை ஆல்யா மானசா.
இதனை தொடர்ந்து ஆல்யா மானசா நடிகை மட்டுமல்ல, டான்ஸர், தொகுப்பாளர், யூடியூப்பர் என பல திறமையுள்ளவராக காணப்படுகிறார்.
ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இவர்களின் குழந்தைகளின் வீடியோக்களை அவர்களுடைய யூடியூப் சேனலில் போடுவார். மேலும் ஆல்யா அவரின் முதல் குழந்தை கிடைத்தற்கு பிறகு மிகவும் குண்டாகி விட்டார்.
இவரின் மார்க்கட் இதோடு முடிந்து விட்டது எனக் கூறும் போது “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியாவாக என்ட்ரி கொடுத்தார்.
எனக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்து விட்டது
இந்த நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிப்பராகும் இனியா சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஷீட்டிங்கிற்கு சஞ்சீவ் வந்து ஆல்யாவிற்கு “ஹாய்” சொல்லும் போது, ஆல்யா பதிலுக்கு “ஹாய் அண்ணா” எனக் கூறியுள்ளார்.
இதனால் கடுப்பான சஞ்சீவ் “அண்ணாவா..” என கேட்டுள்ளார். “ஆமா, எனக்கு சீரியலில் வேறொருவருடன் திருமணம் முடிந்து விட்டது” என பதிலடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சஞ்சீவ், ஆல்யாவை தனியாக விட்டு விட்டு படம் பார்க்க போவதாக கூறி பதிலுக்கு இவரும் கடுப்பாக்கியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சஞ்சீவ் - ஆல்யா நடத்தி வரும் யூடியூப் சேனலில் போடப்பட்டுள்ளது.