மணக்கோலத்தில் இணையவாசிகளை திணற விட்ட ஆல்யா மானசா! எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் ஆல்யா மானசா மீண்டும் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் டாப் ரேட்டிங்கில் ஓடிக் கொண்டிருந்த “ராஜா ராணி” என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்களுக்கு பழக்கமானவர் தான் நடிகை ஆல்யா மானசா.
இவரின் நடிப்பை ஒரே சீரியல் காட்டி அத்தனை இல்லத்தரிசிகளையும் ஒரு கட்டுக்குள் இழுத்து விட்டார். அந்தளவு வசிக்கரிக்கும் பார்வை கொண்டவர் ஆல்யா.
இவர் ஒரு நடிகை மட்டுமல்ல இவர் ஒரு டான்ஸாராகவும் இருக்கிறார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான டான்ஸ் நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். அத்துடன் தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி ரீல்ஸாக போடுவார்.
இதனை தொடர்ந்து ஆல்யா தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இவர்களின் குழந்தைகளின் வீடியோக்களை அவர்களுடைய யூடியூப் சேனலில் போடுவார். மேலும் ஆல்யா அவரின் முதல் குழந்தை கிடைத்தற்கு பிறகு மிகவும் குண்டாகி விட்டார். இவரின் மார்க்கட் இதோடு முடிந்து விட்டது எனக் கூறும் போது “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியாவாக என்ட்ரி கொடுத்தார்.
இணையத்தை அலங்கரிக்கும் ஆல்யா
இந்த நிலையில் ராஜா ராணி 2 வில் நடித்து கொண்டிருக்கும் போது இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பமாகியிருந்தார். அப்போதும்இவர் மார்க்கட் இனி இல்லை அவரின் குழந்தைகளுடன் இருக்க போகிறார் என சின்னத்திரை வட்டாரங்கள் கிசுகிசுக்கப்பட்டது.
இதனை எல்லாம் முறியடிக்கும் வகையில் சன் டிவியில் “ இனியா” என்ற தொடரின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இவரின் ஹார்ட் வொர்க் இதன் மூலம் அவருடைய ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, இனியா சீரியலில் வைக்கப்பட்டுள்ள திருமண காட்சிகளுக்காக மணப்பெண் போன்று அலங்காரம் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், “ எத்தனை குழந்தைகள் பெற்றாலும் ஆல்யாவின் அழகு குறையாது ” என கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.