முட்ட கலக்கி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா! யாருடன் தெரியுமா?
சீரியல் நடிகை ஆல்யா மானசா தனது ரீல் தங்கையுடன் ட்ரெண்டிங்கில் உள்ள முட்ட கலக்கி... பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக களமிறங்கிய இவர் தற்போது சின்னத்திரை நடிகைகளுள் டாப்பில் இருக்கின்றார்.

ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

அந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள். தற்போது ஆல்யா மானசா ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.

இந்நிலையில், அதே தொடரில் நடிக்கு தனது ரீல் தங்கையுடன் இணைந்து 10 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டிங் உள்ள முட்ட கலக்கி... பாடலுக்கு அசத்தலாக குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |