கபடி விளையாடும் போது காலில் எலும்பு முறிந்து கதறிய பிரபலம்!
பொங்கல் தினத்தையோட்டி பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட கபடி போட்டியில், சக போட்டியாளர்களிடம் ஆல்யா மானசா பலத்த அடி வாங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியலில் அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “ராஜா ராணி” என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி, மக்கள் மத்தியில் இடம்பிடித்தவர் தான் நடிகை ஆல்யா மானசா.
இந்த தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த நிலையில் இவர்களுக்கு தற்போது இரண்டு அழகிய குழந்தைகளும் இருக்கிறது. தற்போது இருவரும் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளையும் வீடியோக்களாக பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
கதாநாயகியாக மீண்டும் களமிறங்கிய பிரபலம்
இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா பிரபல தொலைக்காட்சியில் “இனியா” என்ற சீரியலிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த பொங்கல் தினத்தையோட்டி பிரபல தொலைக்காட்சியிலுள்ள கதாநாயகிகளை வைத்து ஒரு கபடி போட்டி ஒழுங்குச் செய்யப்பட்டது.
அதில் புதிதாக அறிமுகமான கதாநாயகி ஆல்யாவும் கலந்துக் கொண்டார். இந்த கபடி போட்டியில் கலந்துக் கொண்ட ஆல்யா எதிர் அணியில் உள்ளவர்களை மீறி தன்னுடைய எல்லைக் கோட்டை எட்டி பிடிக்க முயன்ற போது கீழே விழுந்து அடிப்பட்டுள்ளது.
கபடி போட்டியிலிருந்து வெளியேறிய ஆல்யா
இதனை பார்த்துக் கொண்டிருந்த கணவர் சஞ்சீவ் விரைந்து வந்து வலியில் கத்திய ஆல்யாவிற்கு மருந்து போட உதவி செய்து, அங்கிருந்து அழைத்து சென்றுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியை பிரபல தொலைகாட்சி தங்களின் சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
இதனை பார்த்த ஆல்யா மற்றும் சஞ்சீவ் கார்த்தியின் ரசிகர்கள் ஆல்யாவிற்கு தங்களின் ஆறுதல்களை தெரிவித்துள்ளார்கள்.