மருதமலை முருகன் கோவிலில் நடிகை த்ரிஷா... என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க
நடிகை த்ரிஷா மருதமலைக்கு சென்று ஆத்மார்த்தமாக முருகனை தரிசனம் செய்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை த்ரிஷா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. அதனை தொடர்நந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இறுதியாக விஜயின் தி கோட் படத்தில் “மட்ட” பாடலுக்காக அவர் நடனமாடியியிருந்தார்.மேலும் தெலுங்கில் விஸ்வம்பரா, மலையாளத்தில் ராம் என மற்ற மொழி படங்கள் த்ரிஷாவின் கைவசம் வைத்துள்ளார்.
எல்லா வயதினரையும் ஈர்க்கும் இவரின் மென்மையாக அழகினால் 40 வயதை கடந்த நிலையிலும் பல ரசிகர்களுக்கு இன்றும் இவர் கனவுக்கன்னியாக இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை த்ரிஷா கொண்டாடப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் முடிந்துள்ளதாக கடந்த 13 ஆம் திகதி நடிகை த்ரிஷா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மருதமலைக்கு சென்று முருகனை தரிசனம் செய்துள்ள காணொளியை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |