இரண்டு அணிகளாக பிரியும் ஆல்யா மானசா- சஞ்சீவ் ஜோடி?
பிரபல சின்னத்திரை ஜோடிகளான ஆல்யா - சஞ்சீவ் இரண்டு அணிகளான பிரிந்து மோதிக் கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம்
பிரபல தொலைக்காட்சியில் கடந்த காலங்களில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் தான் நடிகை ஆல்யா மானசாவும், பிரபல நடிகர் சஞ்சீவ் கார்த்திக்கும்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும் ஆல்யா தன்னுடைய இரண்டாவது குழந்தை பிரசவத்திற்கு பிறகு சின்னத்திரையிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
புதிய சீரியலில் ஒப்பந்தம்
இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சியொன்றில் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து இவர் சஞ்சீவ்க்கு போட்டியாக வேறு தொலைக்காட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டு குழுக்களாக பிரிந்து மோதிக் கொள்வார்கள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இது தொடர்பாக ஆல்யா இன்னும் சமூக வலைத்தளங்களில் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.