இனிமேல் அழகு நிலையம் செல்ல வேண்டாம்: கற்றாழையை இப்படி பயன்படுத்தினால் போதும்
நாம் நமது சருமம் அழகாக இருப்பதற்கு பல முறைகளில் முயற்சி செய்கிறோம். இது உடல் ஆரோக்கியத்தில் பங்களிப்பு செய்வது குறைவு.
இதனடிப்படையில் பலர் இயற்கையாக இருக்கும் அழகுசாதப்பொருட்களை தேடுவது குறைவது அப்படியான பொருட்களில் ஒன்று தான் கற்றாழை.
இது ஜெல் வெயிலில் எரிந்த சருமத்தை குணப்படுத்தவும் உதவுகிறது. ஜெல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.
இதில் அழகிற்கு தேவையான அனைத்து சத்துன்னளும் கிடைக்கிறது.இது சரும் கூந்தல் என அனைத்திற்கும் நல்லதொரு ஆற்றலை வழங்கும். கற்றாழை பயன்படுத்துவதால் என்னென் பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை ஜெல்
இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இதில் காணப்படுகின்றன. அவை ஆரோக்கியமான சருமத்திற்கு நன்மை பயக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை கற்றாழை ஜெல்லில் காணப்படுகின்றன.
இந்த வைட்டமின்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.சருமம் ஈரப்பதமாக இருப்பதற்கு மிகவும் உதவுகின்றன.இதிலிருக்கும் தண்ணீர் சருமத்தையும் உடலையும் ஈரப்பதமாக்குகிறது.
வறண்ட சருமத்தில் கற்றாழை ஜெல்லை தடவினால் சருமம் மென்மையாகும். பருக்கள் வெடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது. கரும்புள்ளிகளை குறைக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.
கற்றாழை ஜெல்லில் 2 சொட்டு வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் 5 துளி எலுமிச்சை சாறு கலக்கவும். இந்த பேஸ்ட்டை கறை படிந்த இடத்தில் தடவவும். இப்படி வாரம் இருமுறை கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
முகத்தை நன்கு சுத்தம் செய்ய இது ஒரு சிறந்த பொருளாக பார்க்கப்படுகிறது. இதில் சூரிய ஒளியை எதிர்க்கும் சக்தி அதிகமாக காணப்படுவதால் இது சருமத்தை புற ஊதாக்கதிரில் இருந்து பாதுகாக்கிறது.
இதை தவிர இது உடலில் ஏற்படும் பல பிரச்சனைக்கும் ஒரு தீர்வாக இருக்கிறது. வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் எலிச்சலை தடுப்பதற்கு கற்றாழையை ஜீஸ் போட்டு கடிக்கலாம். தீக்காயங்கள் எரிகாயங்களுக்கு இந்த கற்றாழை மிகவும் பொருத்தமான தீர்வான மருந்தாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |