வேகமாக எடையை குறைக்கும் முருங்கைக்காய் சூப்
பொதுவாக காய்கறிகள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.
அந்த வரிசையில் ஒன்று தான் முருங்கை. இதன் இலைகள், விதைகள், பூக்கள், பட்டை, வேர்கள் மற்றும் முருங்கைக்காய் என அனைத்தும் சாப்பிடுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
முருங்கையில் மற்றைய காய்கறிகளை விட ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவ்வளவு ஆரோக்கியம் கொண்ட முருங்கையில் சூப் செய்து குடிக்கலாம்.
இந்த சூப் வேகமாக உடல் எடையை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகின்றது.
இது போன்று முருங்கை சூப் குடிப்பதால் வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
முருங்கை சூப் குடித்தால் என்ன பலன்?
1. முருங்கையில் பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்களையும் பெற வேண்டும் என்றால் சமைத்து சாப்பிடுவதை விட சூப் செய்து குடிக்கலாம்.
2. ஏகப்பட்ட ஊட்டசத்துக்களை தன்வசம் வைத்திருக்கும் முருங்கையில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நோய்களிலிருந்து எம்மை காத்துக் கொள்கிறது.
3. புற்றுநோய் வராமல் தடுக்கும் காய்கறிகள் முக்கியமானதாக முருங்கை பார்க்கப்படுகின்றது. முருங்கையில் குழம்பு செய்து சாப்பிட முடியாதவர்கள் சூப் செய்து குடிக்கலாம். முருங்கையை போல் தக்காளி, வெண்டைகாயில் கூட புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
4. தற்போது தொற்றுக்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதிலிருந்து எம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டும். இந்த வேலையை முருங்கை சூப் செய்கிறது. வயதானவர்கள் வாரத்திற்கு இரண்டு தடவைகள் முருங்கை சூப் செய்து கொடுக்கலாம்.
5. சிலர் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். முக்கியமான சரியான நேரத்திற்கு சாப்பிடாதவர்கள் வயிற்று புண் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் முருங்கை சூப் குடிக்கலாம். இது புண்களை ஆற்றி, வயிற்றிற்கு நிவாரணம் கொடுக்கும். அத்துடன் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
6. முருங்கை சூப் செரிமானத்தை சீர்ப்படுத்தி வயிற்றில் சேதத்தை உண்டு பண்ணும் புழுக்களை நீக்கும்.
7. டயட் பிளானில் இருப்பவர்கள் அநேகமாக திரவ உணவுகளை எடுத்து கொள்வார்கள். அந்த வகையில், உடல் எடையை வேகமாக குறைக்க நினைப்பவர்கள் உங்கள் டயட்டுடன் முருங்கை சூப் சேர்த்து கொள்ளலாம். இது மற்ற உணவுகள் போல் அல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்து, கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
8. கொலஸ்ட்ரால், பிபி பிரச்சினையால் சிலர் கடும் அவஸ்தை அனுபவித்து கொண்டிருப்பார்கள். இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கை சூப் செய்து குடிக்கலாம். இது உங்களிடம் இருக்கும் கொலஸ்ரோலை குறைத்து, பிபியையும் சரியான அளவில் வைக்கிறது.
9. சரியான நேரத்திற்கு தூங்காமை, மன உளைச்சல், செரிமான கோளாறு போன்ற காரணங்களால் சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருக்கும். இந்த நோயில் பாதிக்கப்பட்டவர்கள் அவருடைய டயட்டில் முருங்கை சூப் சேர்த்துக் கொள்ளலாம். இது மலம் வெளியேறுவதை இலகுப்படுத்தும்.
10. சிலருக்கு கீல்வாதம் பெரும் பிரச்சினையாக இருக்கும். இந்த நோயுள்ளவர்கள் முருங்கை சூப் குடிக்கலாம். இது அவர்களுக்கு பயனுள்ள உணவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- முருங்கைக்காய் - 100 கிராம்
- தக்காளி - 50 கிராம்
- பருப்பு - 30 கிராம்
- நெய் - 1 டீஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- கிராம்பு - 1
- பிரிஞ்சி இலை - 1
- இஞ்சி - அரை அங்குலம்
- மஞ்சள் - அரை அங்குலம்
- கல் உப்பு - 1 சிட்டிகை
- கருப்பு மிளகு - 1 சிட்டிகை
- கொத்தமல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
- தோல் நீக்கிய முருங்கைக்காய், துவரம்பருப்பு, தக்காளி ஆகிய மூன்றையும் குக்கரில் போட்டு சரியாக 4 விட்டு வேக வைக்கவும்.
- அதனுடன் தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றிக் கொள்ளலாம்.
- வெந்தவுடன் அவற்றை எடுத்து நன்றாக மசித்து சாற்றை மட்டும் வடிக்கட்டவும்.
- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும், நெய் ஊற்றி அதில் மஞ்சள், இஞ்சி, பிரிஞ்சி இலை, கிராம்பு, பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும்.
- எல்லாம் வதங்கியவுடன் மசித்த வைத்திருக்கும் முருங்கை சாற்றை சேர்க்கவும்.
- பின்னர் முருங்கை சூப்புடன் கொத்தமல்லி, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்க்கவும்.
- 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் ஆரோக்கியமான முருங்கை சூப் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |