உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? உண்மை இது தான்
பொதுவாக அசைவதடதை மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஒரு சைவ உணவு பிடிக்கும் என்றால் அது நிச்சயம் உருளைக்கிழங்காகத்ததான் இருக்கும்.
உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும் என்பது அதன் சிறப்பம்சமாகும்.குறிப்பாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழங்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகின்றது.
உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் நிறைந்து காணப்படுகின்றது.இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
ஆனால் உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என்ற கருத்து பெரும்பாலானலர்கள் மத்தியில் காணப்படுகின்றது. அது எந்தளவுக்கு உண்மை என்பது குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் எடையை அதிகரிக்குமா?
உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது.மற்ற காய்கறியுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை கொண்ட சத்து மிகுந்த ஒரு காய்கறியாக உருளைக்கிழங்கு காணப்படுகின்றது. இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
உருளைக் கிழங்கில் இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் எடை அதிகரித்துவிடும் என்ற பயத்ததால் பலரும் இதனை தவிர்த்து வருகின்றார்கள்.
உருளைக்கிழங்கில் அதிகம் கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும் என்பதே இதனை தவிர்க்க காரணமாக அமைகின்றது.
ஆனால் உருளைக்கிழங்கு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாக இருப்பதால் இது உடலுக்கு தேவையாக ஆற்றல் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றது.
உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஆகியன செறிந்து காணப்படுகின்றது. ஒரு சாதாரண அளவு உருளைக்கிழங்கில் சுமார் 110 கலோரிகளே காணப்படுகின்றன.இந்த வகையில் இது குறைந்த கலோரிகளையே கொண்டுள்ளது.
உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.உருளைக்கிழங்கில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் உடலுக்கு அதிக நன்மையை செய்கின்றனர்.
இவை உடலில் உள்ள செல்கள் சிதைவடைவதை வெகுவாக குறைத்து, செல்களின் நீண்ட நாள் வாழ்க்கைக்கு உதவுகிறது. இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் இளமையான தோற்றமும் நமக்கு கிடைக்கிறது.
உருளைக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் எடையை அதிகரிக்கும் என்ற கருத்து முற்றிலும் தவறானது. உண்மையில் உருளைக் கிழங்கை எண்ணெய்யில் பொரித்து சாப்பிடுவது அல்லது வெண்ணெய் மற்றும் சீஸ் உடன் சேர்த்து சாப்பிடுவது மாத்திரமே உடல் எடையை வெகுவாக அதிகரிக்கச்செய்யும்.
வெண்ணெய் மற்றும் சீஸ் உடன் சேர்த்து சமைக்கும்போது மட்டுமே உருளைக்கிழங்கின் கலோரிகள் அதிகரிக்கப்படுகின்றது.அதற்கும் உருளைக்கிழங்கும் சம்பந்தம் கிடையாது.
உருளைக்கிழங்கை எப்படி சமைகின்றறோம் என்பதிலும் உங்களின் தனிப்பட்ட உணவு முறை, உடல் செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றம் என்பவற்றை பொருத்தே உடல் எடை அதிகரிக்கும். உடல் எடைணை கட்டுக்குள் வைப்பதற்கு வெறுமனே உருளைக்கிழங்கை தவிர்ப்பது எந்த விதத்திலும் பலனளிக்காது.
உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு முறையான உடற்பயிற்சி, சரியான உணவுப்பழக்கம், சீறான தூக்கம், போதியளவு தண்ணீர் குடிப்பது என அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |