குடற்புழுக்களால் தொந்தரவு? Albendazole மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
என்னதான் சிலருக்கு சத்தான உணவுகளை உட்கொண்டாலும் உடலில் சேராமல் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இதற்காக மருத்துவர்களிடம் செல்லும் போது வயிற்றில் பூச்சிகள் தொந்தரவு இருக்கலாம் என கூறுவார், இதற்காக அவர் பரிந்துரைக்கும் மாத்திரை தான் Albendazole.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை Albendazole மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம், வயிற்றில் வளரும் ஒட்டுண்ணி புழுக்களுக்கு எதிராக செயல்படுகிறது.
இது ஒரு ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும், புழுக்களை அழிப்பதன் மூலம் மேலும் பரவாமல் தடுக்கிறது.
மருத்துவரின் ஆலோசனைப்படி Albendazole மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும், உணவுடன் அல்லது உணவு இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.
அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம், மருத்துவரின் பரிந்துரைப்படி தவறாமல் சரியான அளவுகளில் சரியான நேரங்களில் எடுத்துக் கொள்ளவும்.
பக்கவிளைவுகள்
வாந்தி
மயக்கம்
குமட்டல்
சோம்பல்
இது பொதுவான பக்கவிளைவுகளே, இதை தவிர கடுமையான விளைவுகளை சந்திக்க நேர்ந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்கலாம் என்றாலும் ஒருமுறை மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது.
கல்லீரல் நோயாளிகள் Albendazole மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம், உங்களுக்கு தேவை இருக்கும் பட்சத்தில் மருத்துவரை நாடுவதே சிறந்தது.
இதேபோன்று கர்ப்பிணி பெண்களும் மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
எந்தவொரு மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக எடுத்துக் கொள்வது ஆபத்தான ஒன்றே.