அட்சய திருதியை 2024: கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருகணுமா? இதையெல்லாம் பண்ணுங்க
அட்சய திருதியை எனப்படுவது இந்துக்களின் புனித நாளாக கருதப்படுகின்றது. அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவது வழக்கம்.
அட்சய திருதியை என்பதன் உண்மையான அர்த்தம் வளர்க என்பதாகும். அதனால் தான் அட்சய திருதியை நாளில் எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் அது மேம்மேலும் உயர்வு கொடுக்கும் என்பது ஐதீகம்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் அட்சய திருதியை வெள்ளிக்கிழமை நாளில் வந்துள்ளமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இந்த நாளில் குறிப்பிட்ட சில பரிகாரங்களை செய்வதால் கடன் தொல்லைகளில் இருந்து விடுப்படலாம். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பரிகாரங்கள்
தற்காலத்தில் வருமானத்தை மீறிய செலவு இருப்பதால் அனைவருக்குமே கடன் சுமை பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. அதற்கு நாம் செய்யும் சில தவறுகளும் காரணமாக இருக்கின்றது.
இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் வீட்டில் பொருட்கள் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அது ராகுவின் வீடாக கருதப்படுகின்றது. இதனால் கடன் தொல்லை அதிகரிப்பதுடன் வீட்டில் சண்டை சச்சரவுகளும் அதிகரிக்கும்.
தேவையற்ற பொருட்களை வீட்டில் இருந்து அகற்றுவதன் மூலம் வீ்ட்டில் லட்சுமி கடாச்சம் உண்டாகும். கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் அதிகரிக்கும்.
வீட்டில் உடைந்த அல்லது சேதமடைந்த பொருட்களை வைத்திருப்பது கடன் சுமையை அதிகரிக்கச்செய்யும்.
வீட்டில் கைடிகாரத்தை மறைவில் வைத்திருப்பது மற்றும் ஓடாத கடிகாரத்தை சுவரில் மாட்டி வைத்திருப்பது போன்ற விடயங்களும் கடன் சுமை அதிகரிக்க வழிவகுக்கும்.
வீட்டில் கடிகாரத்தைப் பூட்டி வைக்கக் கூடாது. ஒன்று அதைத் தொடங்குங்கள் அல்லது அது சேதமடைந்திருந்தால், அதை குப்பைக் தொட்டியில் போட்டு விட வேண்டியது அவசியம்.
அட்சய திருதியை நாளில் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலம் கடனில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
ஓம் நமோ வாசுதேவாய நம என்ற மந்திரத்தை 11 முறை தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக உச்சரிப்பதும் கடன் தொல்லையில் இருந்து விடுபட செய்யும் என்பது நம்பிக்கை.
குறிப்பாக லட்சுமி தேவியின் மந்திரமான, “ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நமஹ்” என்று 11 வெள்ளிக்கிழமைகளில் உச்சரிப்பதன் மூலம் வறுமை நீங்கி வீட்டில் பணம் மற்றும் ஏனைய அனைத்து செல்வங்களும் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |