வீட்டில் அள்ள அள்ள செல்வம் குறையாமல் இருக்க...! அட்சய திருதியை தினத்தில் மறக்காம இதை மட்டும் பண்ணுங்க!
அட்சய திருதியை
அட்சய திருதியை என்பது இந்துக்கள் மற்றும் சமணர்கள் வழிபடும் புனித நாள் ஆகும். சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியை நாம் அட்சய திருதியை என்று அழைக்கிறோம்.
அட்சய என்றால் வளர்க என்று அர்த்தம் இந்த நன்நாளில் நீங்கள் எது வாங்கினாலும் மென்மேலும் வளரும் என்று கூறுவார்கள்.
அதேபோல இந்த ஆண்டு இந்தமாதம் ஏப்ரல் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த அட்சய திருதியைக்கு முந்தைய நாள் காலை 09.18 மணிவாக்கில் திகதி ஆரம்பமாகும்.
மறுநாள் காலை 09.27 மணி வரை மட்டுமே அட்சய திருதியை திகதி இருக்கும். 22ஆம் திகதி காலை 07.49 மணி முதல் ஏப்ரல் 23ஆம் திகதி காலை 07.47 மணி வரையில் தங்கம் வாங்க ஏற்ற நேரமாக இருக்கும்.
என்ன செய்ய வேண்டும்
ஏழை எளியோருக்கு அட்சய திருதியை நாளில் புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசிய பெறலாம்.
இவ்வாறு செய்வதனால் புண்ணியம் பெருகும், செல்வ செழிப்பையும், ஆரோக்கியமான வாழ்வையும் பெற விரும்புவோர் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள், சந்தனத்தை தானம் செய்யலாம்.
அதிலும் தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கொட்டும்.