அஜித் ஒரு மோசடிக்காரன்... பல உண்மைகளை உடைத்துப் பேசிய தயாரிப்பாளர்
நடிகர் அஜித் பற்றி பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பகிர்ந்துக் கொண்ட பல விடயங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் அஜித்குமார்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் சினிமாவில் 60 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யாரென்று கேட்டால் யோசிக்காமல் வாயில் வரும் பெயர் அஜித் - சாலினி என்று சொல்வார்கள். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றார்கள்.
இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தற்போது நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அப்டேட் கொடுத்திருந்தார்.
இயக்குனர் மாணிக்கம் நாராயணண்
சினிமாவில் அஜித் எந்தவித கிசு கிசுக்களிலும் சிக்காதவர். இந்நிலையில் அவரைப்பற்றிய பல விடயங்களைப் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.
இவர் தமிழில் வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா அழகப்பன், சீனு, முன்தினம் பார்த்தேனே, வித்தகன் போன்ற படங்களை தயாரித்தவர். இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பல விடயங்களை கூறியிருக்கிறார்.
ஒரு காலக்கட்டத்தில் அஜித்திடம் கொஞ்சம் கூட காசு இல்லை. அந்த சமயத்தில் அஜித்தின் அம்மா, அப்பா ஊருக்கு போகவேண்டும் என்று சொல்லி பணத்தை கடனாக மாணிக்கம் நாராயணனிடம் பெற்றிருக்கிறார்.
அந்தப் பணத்தை திருப்பி கேட்டதற்கு அஜித்தின் மேலாளார் சுரேஷ் சந்திரா ஆதாரம் கேட்டார். அப்போது என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை அதனால் ஒன்றும் செய்யவில்லை. இப்போது அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது இப்போது கேட்டால் அஜித் மாட்டிக் கொள்வார்.
அவர் அந்த தொப்பையை வைத்துக் கொண்டு ஆடி சமாளித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் அவர் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் நல்ல நடிகன் தான் என் பல தகவல்களை கூறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |