விஜய்க்கு அம்மாவாக நடித்தவரா இவர்? முன்னணி நடிகைகளே தோற்றுவிடுவார்கள்! 52 வயதில் எப்படியிருக்கார்னு பாருங்க
தமிழ் சினிமாவில் கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை ஜானகி சபேஷின் தற்போதைய புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜீன்ஸ், குஷி, ஜோடி, அயன், வேட்டையாடு விளையாடு, சிங்கம்-1,2 உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர(அம்மா) நடிகையாக நடித்து உ ள்ளார்.
குணச்சித்திர(அம்மா) நடிகையாக மக்களிடையே பிரபலமானது விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படத்தின் மூலம் தான். கில்லி படத்தில் இவருடைய நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் தற்போது வரை நீங்கா இடம் பிடித்து உள்ளார். பொதுவாக இவர் படங்களில் குறும்பு செய்யும் பசங்களுக்கு சப்போர்ட் செய்யும் வெள்ளந்தியான, வெகுளியான அம்மா ரோலில் தான் நடித்து உள்ளார்.
இதனாலேயே இவர் இளைஞர்கள் மத்தியில் சீக்கிரம் இடம் பிடித்தார் என்றும் சொல்லலாம். அதோடு படத்தில் இவருடைய ஒவ்வொரு டயலாக்கும், நடிப்பும் வேற லெவல். இந்நிலையில் இப்படி அப்பாவியான அம்மா, நடிகையான ஜானகி சபேஸ்க்கு ஒரு மகள் உள்ளார். அவருடைய பெயர் தவானி. தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் எல்லோரும் கில்லி அம்மாவுக்கு இவ்வளவு அழகான மகளா!! என்று ஆச்சரியத்தில் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் அந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.