நடிகையின் கட்டாய கருக்கலைப்பு... தலைமறைவாக இருக்கும் அமைச்சர் முன்ஜாமீன் கோரி மனு
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
பிரபல நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள உறுதியளித்து பின்பு மறுத்துள்ளதாகவும், தனக்கு மூன்று முறை கட்டாய கருப்பலைப்பு செய்துள்ளதாகவும் புகார் அளித்துள்ளார்.
இதற்கான பல ஆதாரங்கள் மற்றும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் மணிகண்டன், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் புகார் அளித்துள்ளதாகவும் சாந்தினி மீது மணிகண்டன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி மணிகண்டனின் மனைவியும் சாந்தினி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தற்போது சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரைத் தேடி வருகின்றனர். தற்போது தலைமறைவாகியிருக்கும் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு ஒன்றினை அளித்துள்ளார்.