தூக்கி எறிய மனம் வரவில்லை! ஐஸ்வர்யா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு: காரணம் என்ன?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் கதை எழுதிவைத்திருந்த காகிதங்களை தூக்கி எறிய எளிதில் மனமில்லை என்று இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
கணவர் தனுஷை பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்த பின்னர் அவர் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் கோவிலுக்கு சென்று வழிபடும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனர் என்பதும் ’3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில், விரைவில் ஹிந்தி படம் ஒன்றினையும் இயக்க உள்ளார்.
வைரலாகும் இன்ஸ்டா பதிவு
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பைரல் போடப்பட்ட சில கோப்புகள் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: காகிதத்தில் பேனாவால் கதை எழுதுவது ஒருவித உணர்வு. கதையின் பரிணாமம் என்பது முதலாவது எழுதுவது, 2வது அது தட்டச்சு செய்வது அதன்பின் சில மாற்றங்களை சேர்ப்பது என்பது வழக்கமானதாகும்.
காலப்போக்கில் நாம் தட்டச்சு செய்த பதிப்பை பார்க்கும்போது அதில் இருந்து ஒரு தாளை கூட தூக்கி எறிய எளிதில் மனசு வராது.
ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை படிக்கும்போது அதில் ஏதாவது புதிதாக தோன்றலாம். அதனை அப்டேட் செய்யவே நாம் விரும்புவோம்’ என பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் கருத்துக்களை பறக்க விட்டு வருகின்றனர்.