பெரிய தவறு செய்துவிட்டோம்.. இழப்பை தாங்க முடியாமல் குமுறிய நடிகை- நடந்தது என்ன?
நடிகர் நேத்ரனின் இறுதி நாட்கள் இப்படி தான் இருந்தது என அவருடைய மனைவி தீபா பகிர்ந்த விடயம் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக இருந்தவர்கள் தான் நேத்ரன்- தீபா.
இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் உயிரிழந்தார்.
நேத்ரனின் மனைவியான நடிகை தீபா முன்னணி சேனல்களின் சீரியல்களில் நடித்து வருகிறார்.
கணவர் நேத்ரன் மறைவுக்குப் பிறகு, தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகள் அபிநயாவும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ஹோமியோபதி சிகிச்சை
இந்த நிலையில், நடிகையும் அவரது மனைவியுமான தீபா தன் கணவரின் மரணத்துக்கு முன் நடந்தது என்ன என்பதை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
நேத்ரன் இறப்பதற்கு முன்னர் அதிகமாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையைக் குறைத்துவிட்டார். அப்போது அவரின் எடை 36 கிலோவாக இருந்தது.
நேத்ரனுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது. அதற்காக ஹோமியோபதி மருந்து எடுத்துக்கொண்டார். அவருக்கு ஹோமியோபதி மீது நிறைய நம்பிக்கை இருந்தது. அத்துடன் கடந்த 4 ஆண்டுகளாகவே அடிக்கடி வயிற்று வலியுடனும் அவதிப்பட்டு வந்தார்.அதற்கும் சிகிச்சையை எடுத்துக்கொண்டார்.
புற்றுநோய் இருந்தது தெரியாது..
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனையில் அனுமதித்து நான்கு மாதமாக சிகிச்சை அளித்தனர். அங்கு அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, ஆபரேஷனுக்குப் பின் போட்ட தையல் பிரிந்து விட்டது. தையல் பிரிந்ததால் ஹீமோ சிகிச்சை அளிக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகளாக வயிற்று வலி இருந்த நிலையில், ஆரம்பத்திலேயே ஸ்கேன் எடுத்துப் பார்த்திருந்தால் நேத்ரனைக் காப்பாற்றி இருக்கலாம். அதைச் செய்யாமல் பெரிய தவறு செய்துவிட்டோம்..” என கண்ணீருடன் பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் சின்னத்திரை ரசிகர்கள், தீபாவிற்கும் மகள்களுக்கும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |