மகன்களுடன் ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்! இனிப்புடன் உச்சக்கட்ட கொண்டாட்டம்
யாத்ரா மற்றும் லிங்காவிற்கு கொழுக்கட்டை ஊட்டி விடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா கடந்த 2004ம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் 18 ஆண்டு வருட காதல் வாழ்க்கை முறித்து தற்போது பிரிந்து வாழ்கின்றார்.
இவருக்கு லிங்கா, யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்கள் கொஞ்ச நாள் அம்மாவிடமும், கொஞ்ச நாள் அப்பா தனுஷிடமும் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி விழாவிற்கு சென்று ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் ரசிகர்கள் வைரலாக்கினர்.
விநாயகர் சதுர்த்தி
இந்நிலைகள் நேற்று கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியை ஓட்டி தனது மகன்களுடன் கணபதி தரிசித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
அதில் யாத்ரா மற்றும் லிங்காவிற்கு கொழுக்கட்டை ஊட்டி விடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதை கண்ட ரசிகர்கள் உங்களது மகிழ்ச்சி இரட்டிப்பாகட்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.