Edge Of The World: கேப் கிரிப் என்ற நகரத்தின் காற்றை விற்பனை செய்வது ஏன்?
இன்றைய காலக்கட்டத்தில் காற்றுமாசு மிகப் பெரிய சுற்று சூழல் பிரச்சிகையாக உருவெடுத்து வருகின்றது.
வாகனங்களில் இருந்துவரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்துவரும் புகை எல்லாவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும் ஒரு பகுதி இருக்கின்றதா என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும்.
உலகில் எத்ததையோ நாடுகளில் எண்ணிலங்காத நகரங்கள் பல்வேறு விடயங்களுக்கு பெயர் பெற்றதாக இருக்கின்றது.
ஆனால் துளியளவும் காற்று மாசு இல்லாத உலகின் தூய்மையான காற்று வீசும் இடம் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது எங்குள்ளது என இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகின் தூய்மையான காற்று வீசும் நகரம்
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வியத்தகு சுற்றுலாத்தலமான உலகின் விளிம்பு, The Edge Of the World அடையாளப்படுத்தப்படுகின்றது.
கேப் கிரிப் எனும் இந்த தீபகற்ப பகுதிக்கு குறைவான சுற்றுலாப்பயணிகளே வருகின்றனர். இது தாஸ்மானியா தீவின் வடமேற்கில் அமைந்திருக்கிறது.
இங்கு சென்றால் கறுப்பு மணல் இருக்கும் கடற்கரைகள், அதனை ஒட்டிய செங்குத்து மலை இறக்கங்கள், பண்ணைகள் அமைந்திருக்கும் மலை உச்சிகள் என பல்வேறு காட்சிகளை காணலாம்.
மொத்த உலகில் இருந்து தனித்து காணப்படுவதால் இந்த பகுதியில் இயற்கையழகு கொஞ்சமும் சேதமைடையாமல் இருக்கின்து. அதனாலேயே கேப் கிரிப், மிகவும் தூய்மையான காற்று வீசும் பகுதியாக திகழ்கிறது.
அண்டார்டிகாவிலிருந்து எவ்விதத்திலும் மாசுப்படாத வேகமான காற்று, மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இந்த இடத்தை அடைகின்றது.
தூய்மையான காற்று சுற்றுசூழலுக்கு உகந்ததாக இருப்பது மட்டுமன்றி மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் இன்றியடையாதது.
இந்த நகரத்தில் காற்று மிகத் தூய்மையானதாக இருப்பதனால் இடம்பெறும் விசித்தரமான விற்பனை முறையும் இங்கு இடம்பெறுகின்றது.
அங்கு கிடைக்கும் தூய்மையான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.ஒரு பாட்டில் வாங்கினால் நம்மால் 160 முறை சுவாசிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |