இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் கடன் இல்லாத வாழ்க்கையை தான் அதிகமாக விரும்புவார்கள்.
பணக்கஷ்டம் வந்து விட்டால் வாழ்க்கையின் நிம்மதியே போய் விடும் என பலரும் சொல்லி கேட்டிருப்போம். யாரிடமும் பணம் எதிர்பார்க்காமல் தனது சம்பாத்தியத்தை தனது விருப்பப்படி செலவழித்து வாழ்வது என்பது ஒரு வரமாகும்.
மாறாக இப்படியான ஒரு வாழ்க்கை இன்று பலருக்கும் அமைவதில்லை. இதற்கான காரணங்கள் பல இருந்தாலும் ஜோதிடமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
ஜோதிடத்தின் படி, ஒருவர் வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்க, புதன் மற்றும் குரு அவர்களின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பது அவசியம். அதே போன்று ஒரு நபரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரமும் அவர்களின் நிதி நிலைமையைப் பாதிக்கின்றன.
அந்த வகையில், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன் பிரச்சினையால் அவஸ்தை அனுபவிப்பார்கள் அப்படியானவர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மூலம் | மூலம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் 19-வது நட்சத்திரமாகும். மற்ற நட்சத்திரங்கள் போல் அல்லாமல் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். எப்படியான பிரச்சினைகளையும் தனியாக சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் சுதந்திரமாக சிந்திப்பார்கள். எதையும் ஆர்வமாக எதிர்க் கொள்ளும் நபராக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் வரும் பணக்கஷ்டங்களை அவர்களையே சரிச் செய்து கொள்வார்கள். |
பூராடம் | 27 நட்சத்திரங்களில் 20-வது நட்சத்திரமாக பூராடம் உள்ளது. பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகு மற்றும் கவர்ச்சிக்கு பெயர் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையில் அமைதி நிறைந்திருக்கும். எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். விசுவாசமானவர்களாக இருப்பதால் பணம் விடயத்தில் பல இன்னல்களுக்கு முகங் கொடுப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவர்களின் உண்மைத்தன்மை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். நம்பிக்கையுடன் முயற்சிப்பது அவசியம். |
உத்திராடம் | உத்திராடம் நட்சத்திரம் மகர ராசிக்காரர்களுக்கு சொந்தமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் போல் அல்லாமல் நேர்மையானவர்களாக இருப்பார்கள். எப்போதும் அமைதியாக இருக்கும் இவர்களிடம் மற்றவர்களும் அன்புடன் நடந்து கொள்வார்கள். இவர்கள் பயணம் செய்வதை அதிகமாக விரும்புவார்கள். குடும்ப உறவுகள் மீது பாசம் மற்றும் கவனிப்புடன் இருப்பார்கள். இதனால் அதிகமான செலவுகள் இருக்கும். அவற்றை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் வாழ்க்கை வாழ்வார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).