1992ல் ஐஸ்வர்யா ராயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இணையத்தில் கசிந்த மாடலிங் பில்
கடந்த 1992 ஆம் ஆண்டு மாடலாக பணியாற்றிய போது ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்த சம்பளம் பில் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் கடந்த 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரை சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “இருவர்” திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.
1992-ல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்யின் புகைப்படங்கள் மற்றும் அவர் அணியும் ஆடைகள் இணையத்தளங்களில் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில், உலக அழகியாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். அப்போது ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் பில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வைரலாகும் நகலின் விவரப்படி, ஒரு பத்திரிகை பட்டியல் படப்பிடிப்பிற்காக கிருபா கிரியேஷன் என்ற நிறுவனத்தின் மாடலாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மே 23 1992 ஆம் ஆண்டு இந்த படப்பிடிப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக அப்போதே 1,500 ரூபாய் பெற்றுள்ளார்.
அதிகாரப்பூர்வ ஒப்பனை பங்குதாரரரா?
மேலும், அண்மையில் சிறந்த திரைப்பட விழாக்களில் முதன்மையானதாகக் கருதப்படும் கான் விழாவில், ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.
ஐஸ்வர்யா ராய், உலகளவில் பிரபலமான அழகு சாதன பிராண்டான L'Oréal Paris-ன் விளம்பரத் தூதராக கடந்த 2003 முதல் இருந்து வருகிறார்.
இதன் காரணமாக குறித்த நிறுவனம் கான் திரைப்பட விழாவின் Official Makeup Partner இருப்பதால் ஐஸ்வர்யா ராய் இந்த விழாவில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |