வெளியிடத்தில் 11 வயது மகளை இப்படியா நடத்துவீங்க? ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றிருக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சனை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் தன் கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது பத்திரிக்கையாளரை சந்தித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியதுடன், ஐஸ்வர்யா ராயை பலரும் திட்டி வருகின்றனர்.
சனி பகவானின் பூஜையில் செய்யக்கூடாத தவறுகள்! பாரிய சிக்கல் ஏற்படும் ஜாக்கிரதை
ஆராத்யாவின் கையை விடாத ஐஸ்வர்யா
உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யா ராய் தனது மகளை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துக் கொண்டு செல்வதை நாம் சிறுவயதிலிருந்தே அவதானித்திருப்போம்.
அதே போன்றும் தற்போது மகளுக்கு 11 வயது ஆகிவிட்ட நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சமீபத்தில் திரும்பியுள்ளார். அப்பொழுது தனது மகளை குழந்தை பருவத்தில் எவ்வாறு தனது கையில் பிடித்துக்கொண்டு வைத்திருந்தாரோ தற்போதும் அதே போன்று பிடித்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
இதனை அவதானித்த நெட்டிசன்கள் ஆராத்யாவுக்கு 11 வயது ஆகிவிட்டது. ஆனால் அவரை இன்னும் குழந்தை போன்றே நடத்துகிறார் ஐஸ்வர்யா. ஆராத்யாவின் கையை பிடித்து நடப்பதை ஐஸ்வர்யா நிறுத்த வேண்டும்.
ஆராத்யாவுக்கு சிறுவனான நடிகை கரீனா கபூரின் மகன் தைமூர் அலி விமான நிலையத்தில் அவரே நடத்து செல்கின்றார்.
ஆனால் ஆராத்யா பாவம். அவரால் இன்னும் அம்மாவின் பிடியில் இருந்து வெளியே வர முடியவில்லை என்றும் பிறந்ததிலிருந்தே இந்த ஹேர் ஸ்டைலை தான் வைத்துள்ளீர்கள், தற்போது ஆராத்யா வளர்ந்துவிட்டார் அதனை அவரது முடி அலங்காரத்தை மாற்றுங்கள் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.