சனி பகவானின் பூஜையில் செய்யக்கூடாத தவறுகள்! பாரிய சிக்கல் ஏற்படும் ஜாக்கிரதை
சனி பகவான் சூரியன் மற்றும் அன்னை சாயா தேவியின் மகனாவார். நியாயத்தின் தேவதையாக இருக்கும்படி சிவ பெருமான் சனீஸ்வரருக்கு ஆசீர்வாதம் செய்துள்ளார்.
அதற்கேற்ப, சனி பகவான் கர்மாவின் கிரகமாக கருதப்படுகிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார். ஆகையால், சனி பகவான் எப்போதும் நியாயமான முறையில் கர்ம பலன்களை அளிக்கும் கிரகமாக விளங்குகிறார்.
சனி பகவான் மிகவும் எளிமையான இயல்புடையவர். ஆனால், கோபம் கொள்வதிலும் அவரை மிஞ்ச யாரும் இருக்க மாட்டார்கள். சனிபகவான் மெதுவாக சஞ்சரிப்பதால் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க அவர் இரண்டரை வருடங்களை எடுத்துக்கொள்கிறார். சனியின் ஏழரை நாட்டு சனி மற்றும் சனிதசையால் மனிதர்களின் வாழ்க்கையில் பலவித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
இதைத் தவிர்க்க மக்கள் பலவித பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறார்கள். சனி பகவானின் பெரும்பாலான வேண்டுதல்கள் சனிக்கிழமையன்று செய்யப்படுகின்றன. சனி பகவானை வழிபடும் போது சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும்.
தவறு செய்தால் சனி பகவானுக்கு உடனடியாக கோவம் வந்துவிடும். சனி பகவானின் பூஜையில் தவறு செய்பவர்களுக்கு வழிபாட்டின் சரியான பலன் கிடைக்காது.
மனைவியை மட்டம் தட்டி பேசிய கணவர்! மரண பயத்தை கண்முன் காட்டிய கோபிநாத்
சனி பகவானின் பூஜையில் செய்யக்கூடாத தவறுகள்
சனி பகவானின் வழிபாட்டில் சிவப்பு நிறத்தில் எதையும் பயன்படுத்தக்கூடாது. இதனால் சனி பகவான் கோபமடைகிறார்.
சனி கோவப்பட்டால், அதை மனிதர்களால் தாங்க முடியாது.
சனி தேவன் சூரியன் மற்றும் செவ்வாய் இருவரையும் தனது எதிரிகளாக கருதுகிறார். எனவே, சனிக்கிழமையன்று சனி வழிபாட்டில் சிவப்பு நிறத்தில் உள்ள எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது.
சனிபகவானை வணங்கும் போது சனியின் கண்களை பார்க்க கூடாது. இதன் மூலம் அவரது தீய பார்வையை தவிர்க்கலாம்.
ஏனெனில் சனிபகவானின் தீய பார்வை நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைகிறது. எனவே, வழிபாட்டின் போது, சனியின் பாதத்தை நோக்கியே நம் பார்வை இருக்க வெண்டும்.
சனி பகவானுக்கு கருப்பு மற்றும் நீல நிறம் மிகவும் பிடிக்கும். எனவே, இந்த நிறத்தைத் தவிர, சனிபகவானை சனிக்கிழமையன்று வேறு எந்த நிற பொருட்கள் கொண்டும் வழிபடக்கூடாது.
சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை பூக்களை அவரது வழிபாட்டில் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
சனி பகவானின் பூஜையில் வெள்ளை எள், அரிசி ஆகியவற்றையும் பயன்படுத்தக்கூடாது.
சனி பகவானை வழிபடும் போது உங்கள் முகம் மேற்கு நோக்கி இருக்க வேண்டும். சனிபகவானை வேறு எந்த திசையிலும் பார்த்து வணங்கக்கூடாது, இதனால் சனிபகவான் கோபமடைகிறார்.
சனி பகவான் சூரியனை தனது எதிரியாகக் கருதுகிறார். ஆகையால் சனிக்கிழமையன்று, சூரிய உதயத்திற்கு முன் அல்லது சூரிய உதயத்திற்குப் பிறகு சனி பகவானை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது.