உலக அழகிப் போல அழகில் ஜொலிக்க வேண்டுமா? அவரே சொல்லும் அழகு ரகசியம்
உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யா ராயின் அழகிற்கு இது தான் காரணம் என சில பியூட்டி டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய்
உலக அழகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் அப்போதும் இப்போதும் தமிழ் சினிமாவில் கொண்டாடும் நடிகையாக இருப்பவர். தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
அதற்கு பிறகு சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். அதன் பிறகு பொலிவூட் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார்.
ஆனால் அவர்களிடம் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விலகி விட்டார். பின்னர் 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
மேலும், இவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பியூட்டி டிப்ஸ்
இந்நிலையில், ஐஸ்வர்யாவிற்கு 50 வயது நெருங்கிக் கொண்டிருக்கையில், அவர் இத்தனை காலம் எப்படி அழகாக இருந்தார் என்பது பற்றிய அழகு ரகசியத்தை சொல்லியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய் தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்நீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதை தனது நீண்ட வருட பழக்கமாக வைத்துள்ளாராம்.
மேலும், கடலைமாவு, பால், தேன் சேர்த்து முகத்தில் போட்டு 10 நிமிடம் கழித்து கழுவி விடுவாராம் இதை மாதம் ஒருமுறை தவறாமல் செய்வாராம். பிறகு தயிருடன் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து முகத்தை ஸ்க்ரப் செய்வார்.
சந்தன எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்வாராம்.சம்மரில் தினமும் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி கொள்வாராம்.
இது மட்டும் தான் இவர் தனது அழகை பராமரிப்பதற்காக பயன்படுத்துவாராம்.