பிக் பாஸால் தற்கொலை செய்ய நினைத்த ஐஷு... பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வருந்தியது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய ஐஷு மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஐஷு கடிதம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், பிரதீப் உட்பட பலரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஐஷுவின் கடிதம்
அவர் கூறியிருப்பது, இந்நிகழ்ச்சியினை பார்க்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்துவிட்டேன்... நல்ல வாய்ப்பு கிடைத்த போதிலும், எனது குடும்பத்திற்கும் சக பெண்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டேன்.
ஒருவரை விரும்புவது, விரும்பப்படுவது, மிகவும் வெறுக்கப்படுவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. எனது தவறான செயலிலிருந்து தன்னை காப்பாற்ற முயன்ற யுகேந்திரன், விச்சும்மா, பிரதீப், அர்ச்சனா, மணி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நான் இந்த நிகழ்ச்சிக்கு தகுதியானவர் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது. கோபம், காதல், பொறாமை, நட்பு ஆகியவை என்னை கண்மூடித்தனம் ஆகிவிட்டது. எனக்கு கிடைத்த முதல் பெரிய மேடை இதுதான். ஆனால் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை புரிந்து கொள்ளவில்லை.
கற்களை என் மீது எவ்வளவு வேண்டுமானாலும் வீசுங்கள். நான் தாங்கிக் கொள்கிறேன்... ஆனால் எனது குடும்பத்தை கஷ்டப்படுத்த வேண்டாம். அதிகமாக அவர்கள் என்னால் கஷ்டப்பட்டு விட்டார்கள்.
இந்த நிகழ்ச்சி என்னை தற்கொலை செய்து கொள்ளும் வரை தள்ளிவிட்டது. ஆனால் என் பெற்றோர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் மட்டும் நான் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
வனிதா அவர்கள், சுரேஷ் தாத்தா அவர்கள் என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்கள் மீது ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன். வனிதா அவர்களின் மகளை விட ஒரு வயது தான் அதிகம், ஆனாலும் தன்னால் முதிர்ச்சியுடன் வலிமையுடன் இருக்க முடியாமல் போய்விட்டேன். நிச்சயமாக அவ்வாறு இருப்பேன்.
பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததற்காக உண்மையிலேயே நான் வருந்துகிறேன். அவருடைய நல்ல நோக்கங்களை இப்போது நான் புரிந்து கொண்டேன். என்னுடைய எபெக்ட் எனக்கு பின்பாவது நிக்சன் நன்றாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். எது சரி, எது தவறு என்று தெரிந்தும் உண்மையை கவனிக்க நான் தவறிட்டேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |