ஒரு நொடி சார்... தண்ணீ குடிச்சிக்கவா? கமலிடம் கெஞ்சிய பூர்ணிமா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கமல்ஹாசன் பூர்ணிமாவை மண்ணைக் கவ்வ வைத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய புதிய டாஸ்க்கும் கொடுத்துள்ளது. இன்றைய தினம் கானா பாலா வெளியேற்றப்படுகின்றார் என்ற நிலையில், கமல்ஹாசன் பூர்ணிமாவை பங்கமாக கலாய்த்து வருகின்றார்.
கமல் வைத்த டாஸ்கில் பூர்ணிமா பேசிக் கொண்டிருக்கையில் பிளாக் ஆகுது சார் தண்ணீ குடிச்சிக்கிறன் என்று கூறியுள்ளார். அதற்கு கமல்ஹாசன் அடைப்பை எடுக்க முடியலைனா சொல்லுங்க அதை நான் எடுத்துவிடுறன் என்று கூறி பங்கம் செய்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |