பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை மொத்தமாக எவ்வளவு நேரம் தூங்கணும் தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க!
இன்றைய காலக்கட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சரியாக 7 முதல் 8 மணிநேர தூங்க வேண்டும் என்பதனை தெரிஞ்சி வைத்துள்ளார்கள்.
இவ்வாறு தூங்காவிட்டால் காலப்போக்கில் அவர்களின் உடல்நிலையில் ஏகப்பட்ட கோளாறுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சரியாக தூங்கி எழும்புவதால் உடல் ஆரோக்கியத்துடன் சேர்ந்து நீண்ட ஆயுளையும் பெற்றுக் கொள்ளலாம்.
இரவு நேரம் தூங்காமல் பகல் வேளைகளில் மது அருந்துதல் அல்லது காபி அல்லது எனர்ஜி பானம், கடிகார அலாரம் அல்லது பகல் வெளிச்சம் போன்ற தூண்டுதல்களால் சரியாக தூங்க முடியாமல் அவஸ்தைபடுபவர்கள் அவர்களே நோயை தேடி கொள்கிறார்கள்.
அந்த வகையில் ஒவ்வொரு வயதிற்கேற்ப ஒருவர் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்ற கணிப்பொன்று இருக்கின்றது இது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
ஒருவர் எத்தனை மணி நேரம்?
1. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் சரியாக 7 முதல் 8 மணிநேர தூங்க வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் மனநோய், இரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
2. பிறந்த குழந்தை: (3 மாதங்கள் வரை) 14 முதல் 17 மணி நேரம் தூங்க வேண்டும். 11 முதல் 13 மணிநேரம் போதுமானதாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் தூங்குகிறார்கள் என அப்படியே விட்டு விட கூடாது அவர்களை எழுப்பி எழுப்பி விளையாட்டு காட்ட வேண்டும். எந்த காரணம் கொண்டும் குழந்தைகளை 19 மணி நேரத்திற்கு மேல் தூங்க விடக்கூடாது.
3. குழந்தைகள் (4 முதல் 11 மாதங்கள்): குறைந்தபட்சம் 10 மணிநேரம் மற்றும் அதிகபட்சம் 18 மணிநேரம்.
4. குழந்தை (1/2 வயது): 11 முதல் 14 மணி நேரம் அவசியம் தூங்க வேண்டும்.
5. 3-5 வயது குழந்தைகள்: 10 முதல் 13 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.
6. பள்ளி நிலை (6-13 ஆண்டுகள் ): 9-10 மணிநேர தூக்கம் அவசியம்.
7. இளம் வயதினர் (14-17 ஆண்டுகள்) 8-10 மணி நேர தூக்கம் தேவை.
8. இளைஞர்கள் (18-25 வயது): 7-9 மணி நேரம் தூங்க வேண்டும்.
9. பெரியவர்கள் (26-64 வயது): 7-9 மணி நேர தூக்கம் அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |